🏠கோதுமை மாவை போட்டு வைக்கும் போது மாவு நாள் பட்டதும் வண்டு வர ஆரம்பிக்கும். அப்படி வராமல் இருப்பதற்கு அதனுடன் சிறிது பிரியாணி இலையைப் போட்டு வைத்தால் வரவே வராது.
🏠சிவப்பு மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் தும்மல் ஏற்பட வாய்ப்பு இல்லை எனவே தும்மல் வராது.
🏠 பச்சைப்பட்டாணியில் வண்டு வராமல் இருப்பதற்கு பட்டாணியுடன் உப்புக் கல்லை சேர்த்து வைத்தால் நிறைய நாட்கள் இருக்கும் மற்றும் வண்டு வைக்காது.
🏠பாத்திரங்கள் கழுவும் போது நன்றாக கழுவி விட்டு அதனை நன்றாக காய போட வேண்டும். அல்லது ஒரு துணியினால் பாதத்தை துடைத்துவிட்டு அதனிடத்தில் வைத்தாள் உப்பு படிவம் படியாது.
🏠டீத்தூள் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது ஏலக்காயும் போட்டு வைத்தால் டீ தூள் ஏலக்காய் உடன் சேர்ந்து நன்றாக வாசமாக இருக்கும், குடிப்பதற்கும் மிக நன்றாக இருக்கும்.
🏠தேங்காய் சட்னி செய்யும் போது மிக ருசியாக வருவதற்கு தேங்காயோடு எதாவது பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கருவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி ருசியாக மற்றும் மணமாக இருக்கும்.
🏠குக்கரில் பருப்பு வேக வைக்கும்போது பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வேக வைத்தால் பருப்பு சாதம் சாப்பிடும் போது மனம் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் பருப்பு சாதம் விரும்பி சாப்பிடுவார்கள்.
🏠வாழைத் தண்டு, கீரை மற்றும் கொத்தமல்லி இவை அனைத்தும் வாடாமல் இருப்பதற்கு ஒரு அலுமினிய காகிதத்தில் சுற்றி வைக்க வேண்டும்.
🏠 தேங்காய் சரிபாதியாக உடைக்க தண்ணீரில் வைத்து மூடிவிட வேண்டும். பின்னர் தேங்காய் உடைத்தால் சரிபாதியாக உடையும்.
🏠தக்காளி சட்னி வெங்காய சட்னி மற்றும் வெங்காயம் வதக்கும்போது வெங்காயம் சீக்கிரம் வதங்க வேண்டுமெனறால் சிறிது சர்க்கரையை போட்டு வதக்கினால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும்.
🏠முட்டைகோஸ் பொறியல் செய்யும்போது முட்டைகோசுடன் சிறிது இஞ்சியை போட்டு வேக வைத்தால் முட்டை கோஸ் பொறியல் ருசியாக இருக்கும்.