இன்றைய இயந்திர வாழ்க்கை முறையால் பன்னாட்டு நிறுவனங்களால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருள்களை நாம் கைவிட்டு உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதில் ஒன்று தான் நிலக்கடலை!
நிலக்கடலை, கடலை,
மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என தமிழகத்தில் அழைக்கப்படும் இதை தொடர்ச்சியாக உண்பதால் பல நன்மைகள் உள்ளன என்பது பலரும் அறியாத ஒன்று.
நிலக்கடலை குறித்த தவறான தகவல்களை இந்தியா முழுவதும் சர்வதேச பன்னாட்டு நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டு உள்ளது. அதனாலேயே நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து, ரீபைண்ட் ஆயிலை பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
நிலக்கடலையில்தான் பாதாம், பிஸ்தா, முந்திரியை விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
நிலக்கடலை சாப்பிட்டால் எடை கூடும் என்பது உண்மையல்ல. மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் இதில் உள்ளது. மேலும் இதிலுள்ள தாமிரம், துத்தநாகம் நமது உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.
நிலக்கடலையிலுள்ள போலிக் ஆசிட் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் விட்டமின் B3 உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மன அழுத்ததை போக்குகிறது.
இத்தகைய சத்துக்கள் நிறைந்த இந்த நிலக்கடலையை பல்வேறு தந்திர நோக்கோடு சர்வதேச பன்னாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருந்து பறித்து விட்டன. இது போன்ற என்னற்ற நம் பாரம்பரிய பொருட்களை தவிர்த்து பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை நம்பி நோய்வாய்ப்பட்டு தவிக்கிறோம். இனியாவது நம் பாரம்பரிய பொருட்களை மீட்டெடுத்து பயன்படுத்த தொடங்குவோம்!.