ஏற்கெனவே 59 சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 47 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகளுடன் தொடர்புடைய மேலும் 47 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்படவுள்ள செயலிகளின் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.