Type Here to Get Search Results !

ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தலாம் - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்!



ஒரே நேரத்தில் நான்கு ட்வைஸ்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் அப்டேட் விரைவில் வர உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இந்தச் செயலிக்கு, பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் மேலும் பல மாற்றங்களும், அப்டேட்களும் வாட்ஸ்அப்-ல் கொண்டு வரப்பட்டன. அந்த வகையில் ஒரே நேரத்தில் நான்கு ட்வைஸ்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் அப்டேட் விரைவில் வர உள்ளது. 

multiple devices support என்ற அப்டேட்டை கொண்டு வர வாட்ஸ் அப் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ஒரு போனில் மட்டுமே வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். கணினியில் WhatsApp web மூலம் பயன்படுத்தலாம். ஆனால் வரப்போகும் அப்டேட் மூலம் 4 டிவைஸ்களில் வாட்ஸ்அப்பை அதே எண்ணுடன் பயன்படுத்த முடியும்.‘Linked Devices’என்ற ஆப்ஷன் மூலம் இதனை வாட்ஸ்அப் நிறுவனம் சாத்தியமாக்கவுள்ளது. அடுத்த அப்டேட்டாக ‘Advanced Search’யையும் கையில் எடுத்துள்ளது வாட்ஸ் அப். அதவாது வாட்ஸ்அப்பில் உள்ள Search ஆப்ஷனை இன்னமும் எளிதாக்கி மேம்படுத்தும் அப்டேட். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் Search செய்து எதையும் எளிதாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுகள் பீட்டா வெர்ஷன் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Puthiya Thalaimurai

Top Post Ad

Below Post Ad