தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவண்ணாமலை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வட கடலோர தமிழகம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இதில் அதிகபட்ச வெப்பநிலை 35டிகியும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் 15 சென்டி மீட்டர் மழையும், கோவை சோலையார், வேலூர் அம்முண்டி தலா 14 சென்டி மீட்டர் மழையும், திருப்பூரில் 13 சென்டிமீட்டர் மழையும், நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் தலா 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
Source News18