மேலும், 2021 முதல் 2023 வரை அடுத்த 3 ஆண்டுளுக்கான டி-20 உலக கோப்பை நடைபெறும் தேதியையும் அறிவித்துள்ளது.
* 2021ம் ஆண்டு டி-20 தொடர்: அக்., – நவ., 2021, பைனல் – நவ.,14, 2021
* 2022ம் ஆண்டு டி-20 தொடர்: அக்., – நவ., 2022, பைனல் – நவ.,13, 2022
* 2023ம் ஆண்டு டி-20 தொடர்: அக்., – நவ., 2023, பைனல் – நவ.,16, 2023.
யுஏஇ.,யில் ஐபிஎல்:
டி-20 உலக கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, அந்த இடைவெளியில் ஒத்திவைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல்.,, தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பி.சி.சி.ஐ., நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தது. இலங்கையும் விருப்பம் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறியிருப்பதாவது:
ஐபிஎல் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும். எதுவாக இருந்தாலும் ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை.
எனவே ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா சூழலை கருதி செப்டம்பரில் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.