செல்போன் வழியாக ‘எதையும்’ ஊடுருவி பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது சீன நிறுவனம். 1990க்கு பிறகு மீண்டும் அரங்கேறியுள்ள இந்த வசதியால் பலரின் அந்தரங்கம் பறிபோகும் நிலை ஏற்படும் என அலறுகின்றனர். செல்போன் இல்லாத கைகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. நாளுக்கு நாள் புதுப்புது மாடல்கள் அறிமுகமாகின்றன. இதில் மற்ற நிறுவன போன்களில் இல்லாதவற்றை அறிமுகப்படுத்தினால் மட்டுமே சந்தையில் நிலைத்து நிற்க முடியும் என்பதால் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல வசதிகளை அறிமுகப்படுத்துகின்றனர். குறிப்பாக நல்ல கேமரா வசதியுடைய போன்களையே பலரும் தேர்வு செய்கின்றனர். அதிலும் செல்பி மோகம் அதிகரித்த பின் இந்த வசதியும் மேம்பட்டுள்ளது. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் சீனாவைச் சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் ஒரு மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் எக்ஸ்ரே கதிர்களை போன்று அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி பிளாஸ்டிக், ஆடைகளை ஊடுருவி போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. அந்த செல்போனிலுள்ள கேமிராவை ஒபன் செய்து ‘போட்டோகுரோம்’ கலர் பில்டரை ஸ்வைப் செய்து கண்ணுக்கு தெரியாத பொருட்களை போட்டோ எடுக்க புரோகிராம் செய்யப்பட்டுள்ள ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.சரியான வெளிச்சம் உள்ள இடங்களில் இதை பயன்படுத்தி ரிமோட் போன்ற மெல்லிய பிளாஸ்டிக்காலானா பொருட்களை கூட ஊடுருவி உள்ளே உள்ளவற்றை படம் எடுக்க முடியும். இந்த டிரிக்கை முதன்முதலில் பென் ஜெஸ்கின் என்பவர் டிவிட்டரில் வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அதை பரிசோதனை செய்து பார்த்தனர். இது தவிர ‘அன்பாக்ஸ் தெரபி’ வீடியோவிலும் இதை காட்சி பூர்வமாக செய்து காட்டினர். அதாவது மெல்லிய கறுப்பு டி-சர்ட்டில் கூட ஊடுருவி படம் எடுப்பதை பலர் கண்டுகளித்தனர். இது எப்படி வேலை செய்கிறது என அதன் தயாரிப்பு நிறுவனத்தை கேட்ட போது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். தெர்மல் கேமிராக்கள், காக்கிளஸ் உள்ளிட்ட கருவிகள் இரவிலும் அகச்சிவப்பு கதிர்களை போட்டோ எடுக்கும் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளன. தீயணைப்பு வீரர்கள் அகச்சிவப்பு கதிர்கள் கேமமிராக்களை கொண்டு தீப்பற்றிய கட்டிடங்களில் புகை வரும் இடங்களுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கின்றனர். இந்த கேமிராவை பயன்படுத்தி மனிதர்களின் ஆடைகளை ஊடுருவி படம் எடுக்க முடியும் என்பதால்தான் பலருக்கு சுவாரசியம் கூடியுள்ளது. ஆனால், இதனால் பலரின் அந்தரங்கம் பாதிக்கப்படுமே என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு பெரும் ஆபத்துள்ளது. இதை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளனர். இருப்பினும், எதிர்காலத்தில் இந்த பிரச்னைக்கும் அந்த செல்போன் நிறுவனம் தீர்வு காணும் என எதிர்பார்க்கின்றனர்.
Source Dinakaran