பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை கூடுவது ஆகும்.
அந்தவகையில் வயிற்று பகுதி, தொடை பகுதி, பின்புறம், கை, போன்ற பல இடத்தில் கொழுப்பு சேருகின்றது. குறிப்பாக பின்பக்கத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு மற்றும் தொடை பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்கிறது கொஞ்சம் கடினமான ஓர் விடயமாகும்.
இந்த கொழுப்புக்கள் நாம் சாப்பிட கூடிய அதிக கலோரிகள் கொண்ட உணவுகளும், அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளும் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம்.
கொழுப்பை குறைத்து சீரான உடல் அமைப்புடன் வைத்து கொள்ள இந்த நெல்லி அதிகம் உதவுகிறது.
இதில் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன், கொழுப்பை குறைக்கவும் செய்கிறது.
இதனை வெறும் வயிற்றில் இப்படி தயாரித்து குடித்தால் விரைவிலே கொழுப்பை குறைத்து விடலாம். தற்போது இந்த கலவை எப்படி செய்வது?
நெல்லிக்காய் சாறு, தேன்
தயாரிப்பு முறை
பெரு நெல்லிக்காயை எடுத்து கொண்டு துண்டு துண்டாக நறுக்கி அரைத்து கொள்ளவும்.
அடுத்து இதனை வடிகட்டி கொண்டு, தேன் சிறிதளவு சேர்த்து கொண்டு காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இப்படி தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால் பின்பக்க கொழுப்பு குறையும்.