கோடை காலம் விரைவில் தமிழக மக்களை வாட்டி எடுக்க இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல உடலையும், வசிப்பிடங்களையும் பராமரிக்க வேண்டியது அத்யாவசியம். இதனை பற்றி கண்டுகொள்ளாதவர்களே, கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட கோடை வெயிலுக்கு மிகசிறந்த உணவு பொருள் என்றால் அது நுங்கு தான். சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட இவற்றில் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் குளு குளு பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நுங்கு - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 1 கப்
முந்திரி திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை :
நுங்கின் தோலை நீக்கிய பின் நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
பின்னர் பாலை நன்றாக காய்ச்சி, ப்ரிட்ஜில் குளிர வைக்க வேண்டும் அல்லது ஐஸ் கட்டிகளை தனியே வாங்கி பாலில் இட்டு குளிரூட்டலாம். குளிர்ந்த பாலுடன் மசித்த நுங்கு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்தால், சுவையும் மனமும் மிக்க நுங்கு பாயாசம் தயார். செயற்கை குளிர்பானங்களுக்கு பதில் குழந்தைகளுக்கு இதை வழங்கினால் உடலுக்கு பலவித நன்மைகளையும் கொடுக்கும் ஆரோக்ய பானமும் கூட.