Type Here to Get Search Results !

கொலஸ்டிரால் பற்றி விளக்கமான தகவல்கள்... கொழுப்பை குறைக்கும் சுலபமான வழிமுறைகள்.!



‘கொலஸ்டிரால்’ என்ற வார்த்தையினை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த பெயரே ஒரு வித பயத்தினை அனைத்து மக்களிடையேயும் எழுப்பி உள்ளது. கொலஸ்டிரால் மனித குலத்தின் எதிரி போல் பார்க்கப்படுகின்றது. கொலஸ்டிரால் மனித குலத்தின் நண்பனும் கூடத்தான் என்பதனை நிறைய மக்கள் அறியவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது. உடலின் அநேக வேலைகளுக்கு கொலஸ்டிரால் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் ரத்தத்தில் அதன் அளவு அதிகமாகக் கூடும் பொழுது அது அமைதியான கொலையாளி ஆகிவிடுகின்றது. மாரடைப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றது.

இந்த கொலஸ்டிரால் எப்படி பாதிப்பிற்கு காரணம் ஆகின்றது. அறிகுறிகள் என்ன, என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்பதனைப் பார்ப்போம். இதற்கான சிகிச்சை முறைகள், தவிர்ப்பு முறைகளையும் அறிவோம்.

இத்தனை முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் கொலஸ்டிரால் என்றால் என்ன?

இந்த கொலஸ்டிரால் எனும் கொழுப்பு உடலின் முக்கிய செயல்பாட்டிற்கு காரணமாக அமைகின்றது. இது உடலாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. உண்ணும் உணவில் இருந்தும் எடுத்துக்கொள்ளப்படும் வழுவழுப்பான கொழுப்பாக இருக்கும். உடலின் அனைத்து செல்களிலும் இருக்கும்.

இதில் எண்ணைத் தன்மை வாய்ந்ததால் ரத்தத்தோடு கலக்காது. ஏனெனில் ரத்தம் தண்ணீர் தன்மை வாய்ந்தது. ஆகவே இது ரத்தத்தில் கொழுப்பாகவே உடலில் சுற்றுகின்றது.

* இது குறைந்த அடர்த்தி கொண்டது - கெட்ட கொழுப்பு

* நிறைந்த அடர்த்தி கொண்டது - நல்ல கொழுப்பு என கொலஸ்டிரால் செரிப்பு புரதமாக இரு பிரிவு படுகின்றது.

இதில் குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்டிரால் கெட்ட கொலஸ்டிரால் என்று அழைக்கப்படுகின்றது. நிறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் நல்ல கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகின்றது.

கொலஸ்ட்ராலின் முக்கிய வேலைகள்

* செல்களின் சுவர்களை உருவாக்குகின்றது.
* பைல் ஆசிட்டினை குடலில் உருவாக்கித் தருகின்றது.
* வைட்டமின் டி உருவாகச் செய்கின்றது.
* சில ஹார்மோன்கள் உருவாக ஏதுவாகின்றது.

அதிக கொலஸ்டிரால், அடர்த்தி குறைந்த கொலஸ்ட்ரால் இரண்டுமே ஆபத்தானது என்பதால் உணவில் கொலஸ்ராலை குறைக்கும் முறைகளை பல ஆய்வுகள் வெளியிட்டுள்ளன.

* 15 கி அளவு சோயா உணவு தினமும் உட்கொள்வது கொழுப்பு கூடாமல் பார்த்துக் கொள்ளும். சோயாபால், டோபு போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன.
* கைப்பிடியளவு கொட்டை வகைகள்
* ஓட்ஸ் மற்றும் பார்லி உணவு
* காய்கறிகள், பழங்கள் - இவைகளை உட் கொள்ள வேண்டும்.

(கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த சில உணவு வகைகள் உட்கொள்ள கூடாது எனவும் சில உணவுகளை மருத்துவ விஞ்ஞானம் வலியுறுத்துகின்றது.)

* வெண்ணெய்
* நெய்
* கொழுப்பு மிகுந்த அசைவம்
* கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள்

இவை கூடாது என வலியுறுத்தப்படுகின்றது.

அதிக அளவு கொலஸ்ட்ரால் மாரடைப்பிற்கு மிகப் பெரிய காரணம் வகிக்கின்றது என்றும் அதனை குறைப்பது மாரடைப்பின் பாதிப்பினை குறைக்கும் என்றும் பார்த்தோம்.

குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு, புரதம், ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றது. உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு, புரதம் கல்லீரலுக்கு சென்று வெளியேறுகின்றது.

அசைவ உணவான முட்டை மஞ்சள், மாமிசம், பாலாடை போன்றவை தவிர்க்கப்பட்டால் ஆபத்துக்கள் வெகுவாய் குறையும். அதே போன்று அதிகம் பொரித்த உணவுகள், கொழுப்பு மிக்க பால், பால் சார்ந்த பொருட்கள் அதிக சாக்லேட், பேக்கரி உணவுகள் இவைகளை தவிர்ப்பது நல்லது. அதிக எடையும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதத்தினை அதிகமாக்கி விடும். எனவே எடையை குறைக்க வேண்டும். பரம்பரையில் இப்பாதிப்பு உடையோரின் சந்ததியினர் ‘வருமுன் காப்போம்’ இருக்க முயற்சி எடுக்க வேண்டும்.

மேலும்
* சர்க்கரை நோய்
* கல்லீரல் பாதிப்பு
* சிறுநீரக பாதிப்பு
* சினைப்பை கட்டி
* கர்ப்ப காலம்
* தைராய்டு பாதிப்பு
போன்றவைகளும் கொழுப்பின் பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

சமீபத்திய ஆய்வுகள் கூறுவது:-

* கெட்ட கொழுப்பு இருதய வால்வுகள் சுருங்குவதற்குக் கூட காரணமாகின்றன.

* நல்ல கொலஸ்டிரால் எனச் சொல்லி அதனை அதிகமாக்கி விட்டால் அதுவும் இருதய பாதிப்பினை ஏற்படுத்தவேச் செய்யும். எனவே அதனையும் அளவோடு வைத்திருப்பதே நல்லது. கொலஸ்டிரால் குறைப்பதற்கான புதிய ‘வாக்சின்’ ஆய்வில் உள்ளது. அதிக கொலஸ்ட்ரால் கவனிக்கப்படாமல் இருந்தால் பக்க வாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

அதிக நாட்கள் உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பில் இருந்து விட்டு பிறகு குறைத்துக் கொள்வது எந்த வித பிரயோஜனம் இல்லாது போய் விடும். அதற்குள் ரத்தக் குழாய்களில் அடைப்பு வெகுவாய் பாதித்து இருக்கும். எப்பொழுதும் சரியான அளவில் இதனை வைத்துக் கொள்வதே பாதுகாப்பாய் அமையும்.

சமீபத்தில் மருத்துவம் 9-12 வயது சிறுவயதியர், அது போன்று 17-21 இளம் வயதினர் இவர்களுக்கு கொலஸ்ட்ரால் பரிசோதனையினை பரிந்துரைக்கின்றது. அதே போன்று பரம்பரையாக இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு 2-8 வயது 12-16 வயது ஆகிய நிலைகளில் மருத்துவ பரிசோதனையை பரிந்துரைக்கின்றது.

குழந்தைகளுக்கான கொழுப்பின் அளவு

நல்ல கொழுப்பு - 170 மிகி அல்லது அதற்கு கீழ் வரை
எல்லை - 170-199 மிகி
அதிக கொழுப்பு - 200 அதற்கு மேல்
குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம்
சரியான அளவு - 110 வரை
எல்லை - 110-129
அதிக அளவு - 130-க்கு மேல்
நிறைந்த அடர்த்தி கொழுப்ப்பு புரதம்
சரியான அளவு - 45 வரை
எல்லை - 40-45
குறைவு - 40-க்கு கீழ்
பெரியவர்களுக்கான கொழுப்பின் அளவு
நல்ல கொழுப்பு - 200 மிகி அல்லது அதற்கு கீழ் வரை
எல்லை - 200 - 239
அதிகம் - 240 அதற்கு மேல்
குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம்
நல்ல அளவு - 100 மிகி அல்லது அதற்கு கீழ் வரை
எல்லை - 130-150
அதிகம் - 160-க்கும் மேல்
உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம்
நல்ல அளவு - 40 மிகி
குறைவு - 39-க்கு கீழ்

இன்னும் சில பரிசோதனைகளும் அளவு முறைகளும் உள்ளன. சில அடிப்படைகளே இங்கு கூறப்பட்டுள்ளன. உயர் கொழுப்பு சேராதிருக்க வீட்டிலேயே ஒருவர் கவனம் எடுத்துக் கொள்ளக் கூடிய குறிப்புகள்.

* பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் பல வகைகள் சேர்த்து 314 கைப்பிடி அளவு வாரம் 3 முறை எடுத்துக் கொள்வது கெட்ட கொழுப்பினை குறைக்கும். கொட்டை வகைகளில் அதிக கலோரி சத்து இருக்கிறது என்பதால் சிறிய அளவே பரிந்துரைக்கப்படுகின்றது.
* ஓட்ஸ்
* வெங்காயம் - மோரில் சிறிய வெங்காயம் டீஸ்பூன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.
* ஒரு டம்ளர் நீரில் கொத்தமல்லி விதை பொடியினை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். ஆய்வு பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

* சோயா பீன்ஸ்
* நெல்லிக்காய்
* பூண்டு - மிகவும் சிறந்தது
* ப்ரஷன் அரிசி
* வெந்தயம்
* பீன்ஸ்
* க்ரீம் டீ
* ஆப்பிள்
* ஆவில் எண்ணெய்
* பச்சை காலிப்ளவர்
* பார்லி
* தக்காளி
* பசலை கீரை
* கொழுப்பு குறைந்த தயிர்
* பீட்ரூட்

ஆகியவை கொழுப்பினை குறைக்க வல்லவை.

கொலஸ்டிரால் பற்றிய சில உண்மைகள் :

* கொலஸ்டிரால் என்ற முக்கியமான பொருள் உடலாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. அசைவ உணவிலிருந்தும் கிடைக்கின்றது.
* உணவு கட்டுப்பாட்டு முறையும், உடற்பயிற்சியும் அதிக கொழுப்பு சத்தினை குறைக்கும்.
* உயர் கொலஸ்டிரால் பாதிப்பு பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம்.
* அதிக கொலஸ்டிரால் என்பது அதுவே ஏதாவது அறிகுறிகளைக் காட்டாது.
* வயதிற்கேற்ப மருத்துவ ஆலோசனைப்படி கொலஸ்டிரால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* வாழ்க்கை முறையை மாற்றினாலே அதாவது உணவுக் கட்டுப்பாடு, கொழுப்பில்லாத உணவு, உடற்பயிற்சி போன்றவையே கொழுப்பினை குறைக்க வெகுவாய் உதவும்.
* மேற்கூறிய முறை பயன் அளிக்காத பொழுதே மாத்திரைகள் உபயோகப்படுகின்றன.
* அதிக கொலஸ்டிரால் என்பதே மாரடைப்பிற்கு முக்கிய காரணமாக கடந்த பத்து வருடங்களாக கவனம் கொடுக்கப்படுகின்றன.

உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக நிறைய நபர்களுக்கு உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக நிறைய பணம் செலவு செய்தும் அதில் நிறைய பேருக்கு எந்த பலனும் இருப்பதில்லை. பொதுவாக இரத்த குழாய்கள் மற்றும் பிற உறுப்புகளில் படியும் கெட்ட கொழுப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி சிறுவயதிலேயே மாரடைப்பு உருவாவதற்கு வழிவகுக்கிறது. இதனால் இறுதியில் மரணமே விளைவாகிறது. இயற்கையாக கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து இந்த சிக்கல்களிலிருந்து எப்படி விடுவது என்பதை பின்வருமாறு காணலாம்.





தினமும் காலை எழுந்தவுடன் கற்றாழை ஜெல்லை எலுமிச்சை பழத்தின் அளவு எடுத்து கொண்டு வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும்.





தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்கு கொதிக்க வைத்து பின்னர் தண்ணீர் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிப்பதுக்கு பதிலாக இந்த கலவையை குடித்து வந்தால் உடம்பில் கொழுப்பு தாங்காது.





கருவேப்பிலையுடம் சிறிது உளுந்து,புளி மற்றும் உப்பை சேர்த்து துவையல் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் கொழுப்பு குறையும்.





ஆப்பிளில் நார்சத்து அதிகம் இருப்பதால் இது உடம்பில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கிறது.





பாலில் நன்கு வேகவைத்த பூண்டை கலந்து காலை ,மாலை என இரண்டு வேலையும் குடித்து வந்தால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.




Top Post Ad

Below Post Ad