Type Here to Get Search Results !

கொரோனாவோடு வெளியே சுற்றினால் தண்டனை – சுகாதாரத்துறை அமைச்சகம் கெடுபிடி!



கொரோனா அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொதுஇடங்களில் உலாவினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படாமல் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டாலும் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தராமல் இருப்பது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் தப்பி ஓடுவது என நாள்தோறும் கொரோனா பரவலை வீரியமடைய செய்யும் வகையில் சிலர் செயல்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

அதனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய விதிமுறையை விதித்துள்ளது.

கொரோனா அறிகுறிகளோடு வீடுகளில், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பொதுவெளிகளில் நடமாட கூடாது. விதிமுறையை மீறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad