கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக கடந்த 12-ந் தேதி கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்தது. பிரதமருக்கோ, அவர்களின் 3 பிள்ளைகளுக்கோ கொரோனா அறிகுறி இல்லை. இருப்பினும், சோபி கிரிகோரியுடன் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.இந்நிலையில், தான் தற்போது மிகவும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் சோபி கிரிகோரி நேற்று தெரிவித்தார். தன்னை பரிசோதித்த டாக்டர், சாதகமான மருத்துவ அறிக்கை அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.