கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மனைவிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி தொற்றுநோய், கொரோனா வைரஸ்க்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டு அதில் 5,835 பேர் உயிரிழந்துள்ளனர்.
75,922 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அவருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்-ன் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கோம்ஸ் இருவரும் நலமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்பெயின்
சமத்துவத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.