Type Here to Get Search Results !

மாமியாருக்கு ஊட்டிவிட்டால் சாப்பாடு இலவசம் – ஹோட்டலின் மகளிர் தின அதிரடி ஆபர் !



ஈரோட்டில் உள்ள பிரபல ஹோட்டல் நிர்வாகம் ஒன்று மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பெண்களை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் தங்கள் ஹோட்டலுக்கு இன்று சாப்பிட வருபவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை விதித்துள்ளது.

தேவதாஸ் என்ற அந்த ரெஸ்ட்ராரெண்டில் இன்று முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை மாமியார் மற்றும் மருமகள் ஜோடியாக வந்து ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொண்டு சாப்பிட்டால் அவர்கள் பணம் செலுத்தாமல் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு சமூகவலைதளத்தில் நல்ல கவனம் கிடைத்துள்ளது.


Top Post Ad

Below Post Ad