Type Here to Get Search Results !

உலக மகளிர் தினம் உருவான வியப்பூட்டும் உண்மை பின்னணி!




உலக மகளிர் தினம் உருவான பின்னணியை சற்று பார்த்தால் இப்போதுதான் அவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் சுதந்திரத்திற்கான தேடல் இருக்கும். பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமஉரிமை மையமாக வைத்து கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர். இதன் முடிவாக 1911, மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றம் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சமஉரிமை அளிக்கவேண்டும் எனப் போராட்டம் நடத்தியுள்ளனர்

இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஜக்கிய ராஜ்யம், ருஷ்யா போன்ற நாடுகளில் வேறுபட்ட நாட்களில் 1917 வரை இவ்வாறான குரல்கள் ஒலித்து வந்தன.

1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர். இத்தகைய பெண்கள் போராட்டங்களால் 1945-ல் சான் பிரான்ஸிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமை (gender equality as a fundamental human rights) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த நிலையில் 18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள்ளேயே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதரை சிறை பிடிப்போம் என்ற மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் கவித்துவங்களில் அன்றைய கால தமிழ் பெண்களின் நிலைமையினை நன்றாக உணரமுடிந்த்து. இதற்கு மேலைத்தேய பெண்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்ற நிலையும் இருந்து வந்த்து. இந்த நிலையில் 1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது.

ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் துயர சாகரத்துள் மூழ்கி கிடந்தனர். பின்னர் கொதித்தெழுந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். இங்கே பெண் வளம் ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தேறியது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜேர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை என்பது வருந்த்தக்கது. 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்பது பெண்கள் போராட்டத்திற்கு கிடைத்த்து மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்த்தக்கது. மென்மைக்கு ஒப்பானது தான் பெண்மை என்று சொல்லி சரித்திரத்திரத்தில் பெண்களின் திறமைகளை பல்வேறு இடங்களில் இருட்ட்டைப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட அதற்கு சற்றும் சளைக்காமல் அணு முதல் அண்டம் வரை தமது திறமைகளை நிலைநாட்டிய வண்ணமே அன்று முதல் இன்றுவரை பெண் இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

Top Post Ad

Below Post Ad