Type Here to Get Search Results !

ஒலிம்பிக் போட்டியில் கபடியை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்’ மத்திய விளையாட்டு துறை மந்திரி தகவல்



நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ பதில் அளித்து பேசுகையில், ‘கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 2,880 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான பயிற்சி வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

கபடி நமது உள்நாட்டு விளையாட்டாகும். அதனை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும். விளையாட்டுகளை மேம்படுத்துவது மற்றும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை பட்டை தீட்டுவது உள்ளிட்ட விஷயங்கள் மாநில அரசுகளின் பொறுப்பாகும்’ என்று தெரிவித்தார்.


Top Post Ad

Below Post Ad