சென்னை மற்றும் டெல்லியில் நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பிற்காக சுய ஊரடங்கை பின்பற்ற பிரதமர் அறிவுறுத்திய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்கும் வகையில் மக்கள் நாளை மறுநாள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மேண்டுக்கோள் விடுத்துள்ளார். வரும் ஞாயிற்றுக் கிழமை அதாவது மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
வரும் நாட்களில் நிகழவிருக்கும் இயற்கை அழிவுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை அறிவதற்கு உதவியாக இந்த ஊரடங்கு இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.அவசியம் இன்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது.
இதில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறினார். 60 வயதுக்கு மேலானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.