Type Here to Get Search Results !

மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது..: மின்வாரியம் தகவல்


  
*கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது: மின்சார வாரியம்

▪️மின்கட்டணம் குறித்த தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது தவறான செய்தி என்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

▪️கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மின் வாரிய ஊழியர்கள் பல வீடுகளுக்குச் சென்று மின் கணக்கு எடுக்காமல் இருக்கின்றனர். ஆனால் பல ஊர்களில் குறிப்பிட்ட தேதியில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகினது. முக்கியமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல வீடுகளில் மின் கட்டணம் துண்டிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனையடுத்து இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் விளக்கமளித்துள்ளது.

_▪️அதில் "தமிழகத்தின் மின் தேவை குறைந்தது வழக்கமாகத் தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றுக்கு 15500 மெகாவாட் மின்சாரமாக இருந்தது. தற்போது, 4000 மெகாவாட் மின்சாரம் குறைந்து 11500 மெகாவாட்டாக இருக்கிறது.

▪️தொழிற்சாலைகள் , வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் குறித்த தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வெளியான செய்தி தவறானது. மார்ச் மாதத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை செலுத்தலாம். அப்படியும், செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படமாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad