கொரோனா வைரஸ் குறித்து போலி செய்திகளைப் பரப்பி அச்சத்தை ஏற்படுத்தினால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், வாட்ஸ் அப் குழுக்களில் வெளியிடப்படும் போலி செய்திகளுக்குக் குழு அட்மின்களே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சூழலில், ஊடகங்களை விட சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளையே மக்கள் அதிகம் சார்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள தெலுங்கானா அரசு, தகவல்களைப் பகிரும் போது மக்கள் பொறுப்புணர்வுடனும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.