Type Here to Get Search Results !

செல்போனில் விளையாடியபடி சென்றதால் காருடன் ஆற்றுக்குள் விழுந்த வாலிபர்












பீஜிங், சீனாவின் குய்ஷூ மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு தனது புதிய காரில் சென்று கொண்டிருந்தார்.அவர் செல்போனில் விளையாடியபடியே காரை ஓட்டி சென்றார். பக்கவாட்டு சுவர் இல்லாத ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ஆற்றுக்குள் பாய்ந்தது.சுதாரித்துக் கொண்ட அந்த வாலிபர், காரின் கண்ணாடியை உடைத்து தப்பிக்க முயன்றார். ஆனால் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் வெளியே வர முடியாமல் காருக்குள் சிக்கிக்கொண்டார்.இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு, காருக்குள் சிக்கியிருந்த வாலிபரை பத்திரமாக மீட்டு, ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.




Top Post Ad

Below Post Ad