Type Here to Get Search Results !

கரோனா பரவல்: எச்சரிக்கை செய்த மருத்துவரிடம் மன்னிப்புக் கேட்ட சீன அரசு!


சீனாவில் கரோனா வைரஸ் பரவல் குறித்து முதலில் எச்சரிக்கை செய்து, பின் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்த மருத்துவரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடந்த வருடம் டிசம்பரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 298 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்திலும் இதுவரை 8 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் கரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 80 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் முதல் கரோனா பாதிப்பு கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி கண்டறியபட்டது. ஆனால் ஜனவரி 14 ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆரம்ப காலங்களில் சீன அரசோ அதிகாரிகளோ இதுகுறித்து இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதுகுறித்து தகவலைகள் எதனையும் சமூக வலைதளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ பதிவிடுபவர்களை ஒடுக்கும் வெளிகளில் அரசு ஈடுபட்டு வந்தது. இதற்கு முன்னால் 2008-ஆம் ஆண்டு சார்ஸ் காய்ச்சல் பரவியபோதும் இதேரீதியிலான முயற்சிகளில்தான் சீன அரசு ஈடுபட்டு வந்தது
அதேசமயம் வூகானில் உள்ள மத்திய மருத்துவமனையில் 34 வயதான கண் மருத்துவர் லி வென்லியாங் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சீனாவில் சார்ஸ் போன்ற ஒரு காய்ச்சல் நோய் பரவுவதைப் பற்றி தனது கல்லூரி நண்பர்களுக்கான இணையக் குழு ஒன்றில் பதிவிட்டார். அத்துடன் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு உதவிகளையும் கோரினார். மற்றவர்களுக்கு எச்சரிக்க முயன்றார்.
ஆனால் 'வதந்திகளை' பரப்பியதற்காக அரசாங்கத்தால் லி தண்டிக்கப்பட்டார். அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. பின்னர் கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவர் லி கடந்த பிப்ரவரி 7 ந்தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சீன அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து தற்போது நோயின் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது
இந்நிலையில் சீனாவில் கரோனா வைரஸ் பரவல் குறித்து முதலில் எச்சரிக்கை செய்து, பின் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்த மருத்துவரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டுள்ளது.
இது தொடர்பாக வூகான் மாகாண போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


லி வென்லியாங்தான் எங்களுக்கு முதன்முதலில் கரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை அப்போது நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம்.

நாங்கள் செய்தது தவறுதான். இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.
உடனே செயல்பட்டு இருந்தால் நாங்கள் இந்த அளவிற்கு கரோனா வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும். பலர் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
சீன மக்களுக்காக உயிர் துறந்த லி வென்லியாங்கிடமும் மற்றும் அவரது குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

அவருக்கு எதிரான வழக்கை அரசு வாபஸ் பெற உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது


Top Post Ad

Below Post Ad