நாடு முழுவதும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏப்ரல் 14ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இதனால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.
இந்த நிலையில் சாலை வரி சுங்கக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அடுத்த மாதம் 14ம் தேதி சுங்கக் கட்டணங்களை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.