மாதுளம்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இரும்புச்சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
மாதுளம் பழம் வயிற்று வலிக்கு சிறந்த மருந்தாகும். உடலில் உள்ள நீர் சத்துகளை அதிகரிக்கும் தன்மையும் மாதுளம் பழத்திற்கு உண்டு.
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.