உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’ பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக நாளை ‘மக்கள் ஊரடங்கு’ நடத்தி தங்களை தாங்களே தனிமைப்படுத்தும் விதமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பஸ்-ரெயில்கள் நாளை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள், ஓட்டல்கள், டாஸ்மாக் மதுக்கடைகள், மார்க்கெட் என அனைத்தும் மூடப்படுகிறது. சென்னையில் வீடற்றோர் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள 51 காப்பகங்களில் தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான காலை, மதியம், இரவு நேர உணவுகளை மாநகராட்சி செய்து கொடுப்பதாக அறிவித்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், போலீசார், தீயணைப்பு துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோர் நாளை முழுமையாக பணி செய்கிறார்கள்.
நாளை கடைகள், ஓட்டல்கள் அடைப்பு என்பதால் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்கவும் அந்தந்த துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.