வெள்ளி, 6 மார்ச் 2020 (10:50 IST) சவரன் ரூ.33,848க்கு விற்பனை ஆகி புதிய விலை உச்சத்தை எட்டியுள்ளது தங்கத்தின் விலை.
கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் 33 ஆயிரத்தை தாண்டியது. பிறகு மெல்ல விலை குறைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488-க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையின் இன்று தங்கம் அதிரடியாக விலை உயந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து ரூ.4,231க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கு விற்பனை. விரைவில் ரூ.34,000-த்தை தாண்டும் எனவும் கூறப்படுகிறது.