உலகம் முழுவதும் 127 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுப்பட்டு விட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் இந்த வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்கொரியா, ஈரான் நாடுகளிலும் கொரோனா வைரஸ் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டுக்காரர்கள் வரும் விமான நிலையங்கள், துறைமுகங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது