ஐபிஎல் 2020-இல் பரிசுத் தொகையை பாதியாக குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செலவைக் கட்டுப்படுத்தும் ஒரு வகையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே
அதிக பொருள்செலவில் நடத்தப்படும் கிரிக்கெட் லீக் போட்டியாக ஐபிஎல் உள்ளது.இந்நிலையில் வரும் 29-ஆம் தேதி மும்பையில் 2020 ஐபிஎல் போட்டித் தொடர் ஆரம்பாகிறது.
அதிக பொருள்செலவில் நடத்தப்படும் கிரிக்கெட் லீக் போட்டியாக ஐபிஎல் உள்ளது.இந்நிலையில் வரும் 29-ஆம் தேதி மும்பையில் 2020 ஐபிஎல் போட்டித் தொடர் ஆரம்பாகிறது.
இந்நிலையில் பொருளாதார மந்தநிலை உலகிலேயே பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றான பிசிசிஐயையும் விட்டு வைக்கவில்லை. இதனால் பல்வேறு செலவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை ஐபிஎல் அணிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடக்க விழா ரத்து:
2020 சீசனில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறாது. மேலும் பிளே ஆஃப் சுற்று நிதியும் குறைக்கப்படும்.
பரிசுத் தொகை 50 சதமாக குறைப்பு: அதே போல் பட்டம் வெல்லும் அணிக்கும், 2, 3, 4ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கும் தரப்படும் பரிசுத் தொகை 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
சாம்பியன் அணிக்கு ரூ.10 கோடி: சாம்பியனுக்கு ரூ.10 கோடி, ரன்னர் அப்புக்கு ரூ.6.25 கோடி, 3, 4ஆவது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.4.375 கோடி பரிசுத் தொகை தரப்படும்.
கடந்த 2019 சீசனில் ரூ.20 கோடி: கடந்த 2019 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.20 கோடியும், ரன்னர் அபப்புக்கு ரூ.12.5 கோடியும், 3,4 ஆம் இட அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் பரிசுத் தொகையாக தரப்பட்டன. மேலும் போட்டி நடத்தும் மைதானங்களுக்கா தொடர்புடைய மாநில சங்கங்களுக்கு அணிகள் தந்த ரூ.30 லட்சம் தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிசிசிஐயும் இதே தொகையை தருகிறது. இதனால் ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்துக்காகவும் மாநில சங்கம் ரூ.1 கோடியை பெறும்.
தானாக நோபால் அறிவிப்பு வெளியிடும் முடிவு கைவிடப்படுகிறது. மூன்றாம் நடுவரே நோபால்களை கண்காணிப்பார்.மேலும் பிசிசிஐ நிர்வாகிகள் விமானத்தில் பயணிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.