Type Here to Get Search Results !

No title


 நடப்பு, 2019 - -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி, ஜூன் வரை நீட்டிக்கப்பட உள்ளது என, வெளியான தகவல் தவறானது; இன்றுடன் நிதியாண்டு கணக்கு முடிக்கப்படுகிறது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஏப்ரல் மாதம் முதல், மார்ச் மாதம் வரையிலான ஆண்டு, நிதியாண்டாக பின்பற்றப்படுகிறது. வணிக நோக்கில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், இந்த நிதியாண்டை பின்பற்றுகின்றன. மார்ச் மாதம், 31ம் தேதியுடன், கணக்கை முடித்து, ஏப்., 1ல் புதிய கணக்கை துவங்குவர்.nsmimg764027nsmimgகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், நிதியாண்டு கணக்கு முடிப்பை, ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, வங்கிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், நிதியாண்டு கணக்கு முடிப்பு, ஜூன் 30வரை நீட்டிக்கப்படுகிறது என, ஆர்.பி.ஐ., அறிவித்ததாக ஒரு தகவலும் பரவியது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: நடப்பு, 2019 - -20ம் நிதியாண்டுக்கான கணக்கு முடிப்பு, இன்று முடிகிறது. இதற்காக, வங்கிகள் இன்று வழக்கம் போல், மாலை வரை செயல்படும்.ஜூன், 30 வரை, நிதியாண்டு கணக்கு முடிக்க அவகாசம் வழங்கி, இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டதாக வந்த தகவல் தவறானது. எனவே, மார்ச், 31ல், வழக்கம் போல் கணக்கு முடித்து, ஏப்., 1ல் புதிய கணக்கு துவங்கப்படும். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Top Post Ad

Below Post Ad