Type Here to Get Search Results !

கொரோனா வைரஸ்: 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு




*விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.

*மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். 

*பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள்  கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . 


சுகாதார பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு



*கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் மருத்துவ காப்பீடு செய்யப்படும்

*விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக ஏப்ரல் முதல் வாரத்தில் 2000 ரூபாய் வழங்கப்படும்

*8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்

*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்

*இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்

*100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு

*விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்

*20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்


நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 

இந்தியாவில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும். இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

80 கோடி ஏழை மக்களுக்கு உதவும் வங்கியில் 'கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடுத்த 3 மாதத்திற்கு தலா 5 கிலோ அரிசி/கோதுமை கூடுதலாக வழங்கப்படும். 

*இத்துடன் 1 கிலோ பருப்பு கூடுதலாக வழங்ப்படும். இவை இரண்டுமே இலவசமாக வழங்கப்படும் 

*₹15000 க்கு கீழ் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கு ஊழியர்களோ, தனியார் நிறுவனங்களோ பிஎஃப் தொகை கட்ட தேவையில்லை. அதை அரசாங்கமே செலுத்தும்


*உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும்

*100 ஊழியர்களை கொண்ட நிறுவனத்தில், ரூ.15000க்கும் கீழ் 90% பேர் சம்பளம் வாங்கும் பட்சத்தில், இந்த திட்டம் பயனளிக்கும்

*நிர்மலா சீதாராமன்


Top Post Ad

Below Post Ad