சென்னையில் தங்கம் விலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இதனால், அந்த மாதம் 4ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சமடைந்தது. அப்போது ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது. அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், தங்கத்தின் விலை புது வருடம் பிறந்த பின் தொடர்ந்து உயர தொடங்கியது.
கடந்த ஜனவரி 1ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 735க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880க்கும் விற்பனை ஆனது. கடந்த ஜனவரி 3ந்தேதி மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதனால் தங்கம் விலை கடந்த செப்டம்பருக்கு பின் பவுன் ஒன்றுக்கு மீண்டும் ரூ.30 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்தது. கடந்த ஜனவரி 8ந்தேதி விலை உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 432க்கு விற்பனை செய்யப்பட்டது.இதன்பின் ஜனவரி 14ந்தேதி இதன் விலை சற்றே குறைந்து ரூ.30 ஆயிரத்து 112க்கு விற்பனையானது.
பின்பு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதன்படி, கடந்த பிப்ரவரி 8ந்தேதி ரூ.31 ஆயிரத்து 184க்கும், பிப்ரவரி 15ந்தேதி ரூ.31 ஆயிரத்து 392க்கும், பிப்ரவரி 20ந்தேதி ரூ.31 ஆயிரத்து 840க்கும், பிப்ரவரி 21ந்தேதி ரூ.32 ஆயிரத்து 96க்கும் பிப்ரவரி 22ந்தேதி ரூ.32 ஆயிரத்து 576க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்பின்னர் பிப்ரவரி 24ந்தேதி ரூ.33 ஆயிரத்து 328 ஆக விற்பனையானது. இதனால் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டது.சென்னையில் தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி 29ந்தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.624 குறைந்து ரூ.31 ஆயிரத்து 888க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த 2ந்தேதி ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 40 ஆக இருந்தது. இந்நிலையில், தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 112 ஆக நேற்று விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று கிராம் ஒன்று ரூ.4 ஆயிரத்து 14 ஆகவும் விற்பனையானது. பின்னர் இந்த விலை மீண்டும் உயர்ந்து பவுன் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரத்து 200 ஆக இருந்தது.இந்நிலையில், தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு 1,024 ரூபாய் அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 224 ஆக விற்பனையாகிறது. இதேபோன்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 153 ஆக உள்ளது. இதனால் தங்கம் வாங்க விரும்பிய இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.