பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான்கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கான கடைசி தேதியாக பல முறை அறிவித்த நிலையில், தற்போது இம்மாதம் மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவ்வாறு இம்மாத கடைசிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.