Type Here to Get Search Results !

ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்

இனி அடிக்கடி எடுக்க முடியாது ஏடிஎம்.மில் பணம் எடுக்க கட்டுப்பாடு: கட்டணத்தையும் உயர்த்த திட்டம்


நாடு முழுவதும் ஏடிஎம்.களில் பணம் எடுக்க மீண்டும் கட்டுப்பாடு வருகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கும் சலுகை பறிக்கப்படுகிறது. கட்டணமும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏடிஎம்.மில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடு இருந்தது. குறிப்பிட்ட தடவைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டது.

ஆனால், இப்போது மீண்டும் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்.களில் பணம் நிரப்பும் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஏடிஎம்களில் அடிக்கடி பணம் நிரப்ப வேண்டியிருப்பதாலும், பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பதாலும் கட்டணத்உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.

இப்போது ஏடிஎம்.மில் ஒரு முறை பணம் எடுத்தால், ஏடிஎம் நிறுவனத்துக்கு சம்பந்தப்பட்ட வங்கி 15 ரூபாய் வீதம் கட்டணம் தர வேண்டும். இந்த கட்டணம் போதாது என்று கூட்டமைப்பு கூறி வருகிறது. இது குறித்து ஆராய ரிசர்வ் வங்கி ஒரு உயர் கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி சில பரிந்துரைகளை கடந்த டிசம்பர் மாதம் அளித்துள்ளது.

அந்த பரிந்துரைகள் வருமாறு:
* 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகர்ப்புற பகுதியில் உள்ள ஏடிஎம்.மில் பணம் எடுத்தால் ஒரு முறைக்கு 17 ரூபாய் அளிக்கலாம்.

* அதுபோல, நகர்ப்புற பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இனி அடிக்கடி பணம் எடுக்க முடியாது. 3 முறை தான் கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதிக்கப்படலாம். தற்போது 5 முறை கட்டணமின்றி எடுக்கலாம்.

* ஊரக மற்றும் சிறிய டவுன்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஒரு முறைக்கு 18 ரூபாய் அளிக்கலாம். இங்கு அதிகபட்சம் 6 முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதிக்கலாம். இவ்வாறு பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த முடிவையும் எடுக்கவில்லை. இன்னும் ஆலோசனை நிலையில் தான் உள்ளது.

இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல் புதிய ஏடிஎம்கள் இல்லை
நாடு முழுவதும் 2,27,000 ஏடிஎம்கள் உள்ளன. இவற்றில் தனியார் ஏடிஎம் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படுவது 21,300 தான். மற்றவை எல்லாம் வங்கிகள் சொந்தமாக இயக்குபவை.
கடந்த 2018ம் ஆண்டில் தான் அதிகபட்சமாக ஏடிஎம்களை வங்கிகள் போட்டி போட்ட நிறுவின. ஆனால், அதை பராமரிக்கும் செலவுகள் அதிகம் என்பதால், அந்த ஆண்டுடன் வங்கிகள் சொந்தமாக ஏடிஎம்களை நிறுவுவதை நிறுத்தி ெகாண்டன.

இந்தியாவில் குறைவு
சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 2 ஆயிரம் பேருக்கு ஒரு ஏடிஎம் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், 130 கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் 5919 பேருக்கு ஒரு ஏடிஎம் வீதம் தான் உள்ளது. ஊரகப்பகுதிகளில் ஐந்தில் ஒரு ஏடிஎம் என்ற வீதத்தில் தான் அமைக்கப்பட்டு-்ள்ளது. அதிலும் தனியார் வங்கிகள் 10ல் ஒரு ஏடிஎம் தான் அமைத்துள்ளன.


Top Post Ad

Below Post Ad