Type Here to Get Search Results !

ஆஸ்துமாவை குணமாக்கும் உணவு முறைகள்

அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால்வயிறு காலியாக காற்று செல்வதற்கு இடமிருக்க வேண்டும். ஆஸ்துமா உள்ளவர்கள் முழுவயிறு சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதிக பிராணசக்தி ஜீரணமாவதற்கு சென்றுவிடும். எனவே அஜீரணமாகி வயிறு உப்பிசமாகி உடன் மூச்சுத் திணறல் வரும்.

மிகவும் ஆறிய குளிர்ந்த உணவைச் சாப்பிடாதீர்கள். சூடான உணவைச் சாப்பிடுங்கள். இரவு சாப்பாடு மிகக்குறைவாக 7.00 மணிக்குள் சாப்பிடவும். அதுவும் சூரியன் மறையும் முன் 6.00 மணிக்குள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

இரவில் தயிர், பால், குளிர்ந்த பானங்கள் அறவே தவிர்க்கவும். இரவில் கீரை தவிர்க்கவும். பூண்டு போட்டு அரிசிக் கஞ்சி சாப்பிடவும். பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டு சாப்பிடவும்.

Top Post Ad

Below Post Ad