Type Here to Get Search Results !

கல்வி முதல் விவசாயம் வரை.. கடைசி முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் அதிமுக அரசு.. என்ன எதிர்பார்க்கலாம்!

தமிழக பட்ஜெட்டில் இன்று விவசாயம் தொடங்கி கல்வித்துறை வரை பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முக்கியமான அதிரடி அறிவிப்புகள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் பின் வரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது:

இந்த பட்ஜெட் பெரும்பாலும் விவசாயத்தை குறித்து தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். விவசாயம் மீது தமிழக அரசு திடீரென்று கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இதனால் விவசாயம் தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை அரசு வெளியிட வாய்ப்பு உள்ளது.

அதேபோல் இந்த பட்ஜெட்டில் பெண்கள் சார்ந்த முன்னேற்ற நலத்திட்டங்கள் அதிகம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

மாணவர்களை கவரும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம், புதிய விலையில்லா அறிவிப்புகள் ஏதாவது வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது தொடர்பான ஆலோசனை நடந்து வந்தது. அது தொடர்பான அறிவிப்புகளும் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் இதில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநில மக்களுக்கான வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் அறிவிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் இன்று வெளியாகலாம்.

தமிழக அரசு குடிமராமத்து பணிக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதனால் குடிமராமத்து பணிகள் தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை வெளியிட அரசு நினைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பபுதிய மாவட்டங்களுக்கான நலத்திட்டங்கள் இன்று அறிவிக்கப்படலாம்.


Top Post Ad

Below Post Ad