Type Here to Get Search Results !

கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: பிளாஸ்டிக் கவரால் உடலை மூடி பயணித்த விமான பயணிகள்



கொரோனா வைரஸ் பீதியால் விமான பயணிகள் தங்களை முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பாதுகாப்புக்காக  முககவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்கின்றனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பீதியால் விமான பயணிகள் தங்களை முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதுகுறித்து பெண் பயணி ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பெண் பயணி ஒருவர் ‘பிங்க்’ நிற பிளாஸ்டிக் உடையை கை, கால், உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அவரது அருகில் ஆண் பயணி ஒருவர் தன்னுடைய உடல் முழுவதும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Source: Dhinaboomi

Top Post Ad

Below Post Ad