Type Here to Get Search Results !

நைட் டூட்டி பார்ப்பவர்களுக்கு டிப்ஸ்

நைட் டூட்டி அதாவது இரவு வேலைக்கு செல்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

1. முதலில் முடிந்தவரை இரவு வேலையை நிறுத்த வேண்டும். நைட் டூட்டி பார்ப்பது உடம்புக்கு கெடுதல், எனவே வாய்ப்பு இருந்தால் வேறு பகல் வேலைக்கு செல்லவும்.

2. இரவு வேலை பார்ப்பவர்கள் நடு இரவில் பசி எடுத்தால் நல்ல உணவு, வீட்டு உணவு சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் உடல் கெடாமல் இருக்கும். 

உதாரணமாக பகல் வேலைக்கு செல்பவர்கள், காலையில் சாப்பிட்டு விட்டு செல்வார்கள் பிறகு மதியம் சாப்பிடுவார்கள். பிறகு இரவு சாப்பிடுவார்கள்.

ஆனால் இரவு வேலைக்கு செல்பவர்கள் மாலை வேளையில் சாப்பிட்டுவிட்டு இரவு வேலைக்கு செல்வார்கள், அதன்பிறகு காலையில் தான் சாப்பிடுவார்கள். இது தவறு.

எப்பொழுது இரவு வேலைக்கு செல்கிறீர்களோ நீங்கள் இரவை பகலாக நினைக்க வேண்டும். நடு இரவை மதியமாக நினைக்கவேண்டும். 

இரவு துவங்குவதால் உணவு தேவையில்லை. ஆனால் விழித்திருந்தால் உணவு தேவை. என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே மாலை உணவு அருந்திய பிறகு, வீட்டில் நல்ல உணவை உங்களுக்கு பிடித்த உணவை சுட சுட செய்து அதை பார்சலாக எடுத்துச் செல்லுங்கள். இரவு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது நடுவில் ஒரு பசி வரும், அப்பொழுது இந்த வீட்டு உணவை சாப்பிடுங்கள். இப்படி சாப்பிட்டால் இரவு கண் விழித்து வேலை செய்வதற்கான சைடு எஃபக்ட் ல் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் பொதுவாக இரவு வேலை செய்பவர்கள் நடு இரவில் வரும் பசியை மதிக்காமல் அந்த நேரத்தில் டீ குடிப்பது, காபி குடிப்பது, பீடி, சிகரெட் போன்ற போதைப்பொருளுக்கு அடிமையாவது என்று இருக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் உடல் கெட்டுப் போகிறது.

3. மூன்றாவது விஷயம் இரவு வேலை முடித்து விட்டு அதிகாலையிலோ காலையிலோ வீட்டுக்கு வந்தவுடன் உடனே படுத்து தூங்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

ஆனால் பலரும் வீட்டுக்கு வந்தவுடன் குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, வீட்டிலோ வெளியிலோ சில பல வேலைகளை பார்த்துவிட்டு அதன் பிறகு தூங்குகிறார்கள். இப்படி செய்தால் சரியான தூக்கம் வராது மேலும் இரவு கண் விழித்ததால் ஏற்பட்ட அசதி குறையாது.

எனவே இரவு வேலை செய்பவர்கள் காலையில் வீட்டுக்கு வந்தவுடன் குளிக்காமல், சாப்பிடாமல், எந்த வேலையும் செய்யாமல் நேராக படுக்கைக்குச் சென்று படுத்து தூங்க வேண்டும். தூக்கம் தானாக கலையும் வரை தூங்க வேண்டும். அதன் பிறகு எழுந்து குளிக்கலாம், சாப்பிடலாம். பிறகு மீண்டும் தூங்கலாம். அப்போதுதான் இரவு விழித்தால் ஏற்படும் குளறுபடிகளை சரியாகும்.

மேலும் இரவு வேலைக்கு செல்பவர்கள் பகலில் சரியாக ஓய்வெடுக்காமல் பல வேலைகளை செய்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது.

இரவு வேலைக்கு செல்பவர்கள் இரவை பகலாகவும், பகலை இரவாகவும் நினைக்கவேண்டும்.

முடிந்தவரை பகலில் ஓய்வில் இருக்க வேண்டும். பகலில் முக்கியமான வேலைகள் மட்டுமே பார்க்க வேண்டும். பகல் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு ஓய்வை கெடுத்துக்கொண்டு வேலைகளை பார்க்க கூடாது.

நான் கூறிய இந்த விஷயங்களை ஒழுங்கு செய்தால், கண்டிப்பாக இரவு தூக்கம் விழித்து பார்ப்பதால் ஏற்படும் உடல் பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்

Top Post Ad

Below Post Ad