Type Here to Get Search Results !

இணையத்தில் வைரலாகி வரும், நவீன டெக்னாலஜி நிச்சயதார்த்த வீடியோ

இன்றைய இளைய தலைமுறையினர் தொழில்நுட்பங்களை மிக எளிதாகக் கையாளுகின்றனர்.தற்போதுள்ள சூழலில் ஸ்மாட்போன் இல்லாத நபர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுகிறது. ஸ்மாட்போன் பயன்பாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே அதனால் ஏற்படும் ஆபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் இணையம் வாயிலாகத் தான் நடைபெற்று வருகிறது எனலாம்.


ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பார்க்காமல் காதல் என்பது போய் நம் நவீன டெக்னாலஜி நம்மை எங்கு சென்று நிறுத்தியுள்ளது என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. அதாவது வெளிநாட்டில் வேலை செய்யும் பெண் ஒருவருக்கும், இளைஞருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமண நிச்சயதார்த்தமும் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வர மனமக்களால் முடியவில்லை. இதனால் செல்போனிலேயே அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பெண்ணும் இளைஞரும் வீடியோ காலில் இருக்க, சடங்குகள் செய்யப்பட்டு பெண் நெற்றியில் குங்குமம் இடுவதற்கு பதில் செல்போனில் பொட்டு வைத்து, அதற்கு பட்டுப்புடவையைப் போர்த்தி நலங்கு வைக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
2020 ஆம் ஆண்டு நடந்த இந்த நவீன டெக்னாலஜி நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
இதை கண்ட சிலர் இதற்கு ஆதரவாகவும், சிலரோ திருமணம் என்ற உன்னத தருணத்தை வளர்ச்சி என்ற பெயரில் முடக்கிவிட்டிர்களே என்றும் புலம்பி வருகிறார்கள்.






Top Post Ad

Below Post Ad