Type Here to Get Search Results !

கண்பார்வை குறைபாடு, கண்கள் வறட்சிக்கு சிறந்த வரப் பிரசாதம் இந்த எளிய வைத்தியம்


நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது. இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை. அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய்: வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

ஆலிவ் எண்ணெய் : தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது.

உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.


Top Post Ad

Below Post Ad