Type Here to Get Search Results !

ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!


தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் (ஸ்டெப் கவுன்டிங்) பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் பீடோமீட்டர் அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.nsmimg754850nsmimgமுடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம். மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம் என்றார்.

Top Post Ad

Below Post Ad