Type Here to Get Search Results !

கண்டுபிடித்த மருத்துவருக்கே பரவிய கொரோனா வைரஸ்


 
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கண்டுபிடித்த மருத்துவருக்கே அந்நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை கண்டுபிடித்த மருத்துவர் லீ வென்லியாங்கிற்கு அந்நோய் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே அவர் கோரோனா வைரஸ் குறித்து கண்டறிந்து, மருத்துவ குழுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரை சந்தித்த அரசு அதிகாரிகள் வைரஸ் குறித்து யாரிடமும் பேசக்கூடாது என நிபந்தனையோடு  கையெழுத்து வாங்கியுள்ளனர். அதிலிருந்து சில நாட்கள் கழித்து லீ வென்லியாங்கிற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்து பார்த்ததில் அது கொரோனா வைரஸ்க்கான பாதிப்பு என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஏனென்றால் அவருக்கு காய்ச்சல் வருவதற்கு இருதினங்கள் முன்புதான், கொரோனா தாக்கிய பெண்ணுக்கு சிகிச்சையளித்தார். மேலும் இதுகுறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

மேலும் இது தொடர்பாக சீன அரசு லீ வென்லியாங்கிடம் மன்னிப்பும், நன்றியும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Top Post Ad

Below Post Ad