Type Here to Get Search Results !

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது


தஞ்சாவூர்,மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று (புதன்கிழமை) குடமுழுக்கு  நடக்கிறது. இதனை முன்னிட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தஞ்சைக்கு வருகை தந்ததால், தஞ்சை மாநகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. தஞ்சையில் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் இலவச பேருந்துகள் மூலமாக மட்டுமே பெரிய கோவிலுக்கு செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Top Post Ad

Below Post Ad