Type Here to Get Search Results !

கூகுள் மேப்பையே திணறடித்தவர்


99 ஸ்மார்ட் போன்களில், ஒரே நேரத்தில் கூகுள்மேப் செயலியை ஓபன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா மொபைல் போன்களையும், ஒரு தள்ளுவண்டியில் ஒன்றாக வைத்து, பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்து செல்ல ஏற்பாடு செய்தார். 

இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக, ஒரே நேரத்தில், 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும், டிராபிக் நெரிசலை குறிக்கும் சிவப்பு வரிகள், கூகுள் மேப்பில் தோன்றின. இதைப்பார்த்த அப்பகுதி கூகுள் மேப் பயனாளர்களுக்கு, ஒரே, ஷாக். எதற்காக இப்படி செய்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

Top Post Ad

Below Post Ad