சிட்னிஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெறுகிறது.
இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார். இந்த நிலையில், இந்த போட்டிக்கு நடுவே, தெண்டுல்கர் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ள தெண்டுல்கர், தோள்பட்டை காயம் காரணமாக பேட்டிங்கில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் கூறியுள்ள போதிலும், ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட்டிங் செய்ய தயார் என பதிவிட்டுள்ளார்.