ஆக்ராஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். தொடர்ந்து இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இன்று மாலை 5.15 மணிக்கு தாஜ்மகாலை பார்வையிட டொனால்டு டிரம்ப் தனது காதல் மனைவி மெலனியா டிரம்புடன் வருகிறார். அங்கு ஒருமணி நேரம் தனது குடும்பத்தினருடன் அவர் செலவிடுகிறார்.தாஜ்மகாலை தனது மனைவியுடன் சேர்ந்து டிரம்ப் இன்று சுற்றி பார்க்கவுள்ளார். இதையொட்டி ஆக்ராவில் தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளதால், டிரம்ப் வருகையின்போது குரங்குகளால் பிரச்னை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட வரும் டிரம்பின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பாதுகாப்பு படை குழுவில் 5 லாங்கூர் இன குரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. டிரம்ப் அணிவகுப்பு வாகனம் செல்லும்போது குரங்குகள் வந்தால், அதை விரட்டியடிக்கவும், அச்சுறுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்ட 5 லாங்கூர் இன குரங்குகள் பாதுகாப்பு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளன.
Source Dinathanthi