கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூரில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற வில்லேஜ் மாரத்தான் போட்டியை சனிக்கிழமை திருவள்ளூர் ‘மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்,
ஸ்ரீனிவாசன் கல்வி அறக்கட்டளை அமைப்பின் சார்பில் ஆரோக்கிய வாழ்வை வலியுறுத்தும் வகையில் வில்லேஜ் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாநெல்லூர் முதல் பல்லவாடா வரை ஜூனியர் பெண்கள் , மாநெல்லூர் முதல் பல்லவாடா வரை சீனியர் பெண்கள், மாநெல்லூர் முதல் பல்லவாடா வரை ஜூனியர் ஆண்கள், மாநெல்லூர் முதல் பல்லவாடா வழியாக போந்தவாக்கம், மாதர்பாக்கம் மற்றும் பாதிரிவேடு வரை சீனியர் ஆண்கள் என 4 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றது.
மாநெல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய இந்த போட்டிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்றனர்.
போட்டிகளுக்கு மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், பாதிரிவேடு ஊராட்சி தலைவர் என்.டி.மூர்த்தி, மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன், ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர், பல்லவாடா ஊராட்சி தலைவர் பல்லவி பன்னீர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு, ஆரோக்கியமேரி, மாவட் ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து இந்த போட்டிகளில் 5000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவி, மாணவிகள் பங்கேற்ற நிலையில் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த 120 பேர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த மாரத்தான் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீனிவாசன் கல்வி அறக்கட்டளையை சேர்ந்த வாசுதேவன், தமிழ், பிரபாகரன் முன்னின்று நடத்தினர்.