Type Here to Get Search Results !

நாளை உலக தாய்மொழி தினம்.22 மொழிகளில் பேசி அசத்திய குடியரசு துணைத் தலைவர்



டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு 22 மொழிகளில் பேசி அசத்தினார்.
உலக தாய்மொழி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் தமது பன்மொழித் திறனை வெளிக்காட்டிய வெங்கய்ய நாயுடு, அனைத்து இந்தியர்களும் தத்தம் தாய்மொழியை வளர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வதுடன், பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்திய மொழிகளை வளர்க்க தேசிய அளவிலான இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்ற அவர், தாய்மொழியை பாதுகாத்து வளர்ப்பதன் மூலம் நமது பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரத்தையும் வளர்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பதை சட்டமாக்கலாம் என்பதும் அவரது எண்ணம்.

Top Post Ad

Below Post Ad