Type Here to Get Search Results !

டிரம்ப் திறந்து வைக்கும் பிரமாண்ட மைதானம்: 10 அம்சங்கள்



ஆமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடிரா (Motera)மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று திறந்து வைக்கிறார். இந்த மைதானத்தில் பிரதமர் மோடி யுடன் இணைந்து, நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் டிரம்ப் உரையாற்றுகிறார்.nsimg2487738nsimgடிரம்ப் திறந்து வைக்க உள்ள மோடிரா மைதானத்தின் சிறப்பம்சங்கள் :1. இந்த மைதானம் ஒரு லட்சத்து 10,000 பேர் அமர கூடியது. இதுவரை ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் (95,000 பேர் அமரும் வசதி) தான் உலகின் மிகப் பெரிய மைதானமாக கருதப்பட்டு வந்தது. இதற்கு முன் 49,000 பேர் அமரும் வகையிலான மைதானத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் இந்த பிரம்மாண்ட மைதானம் கட்டப்பட்டுள்ளது.2. ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனத்தால் இந்த பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பழைய மோடிரா மைதானம் பல சாதனைகளை உள்ளடக்கியதாகும். கவாஸ்வர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தது இந்த மைதானத்தில் தான். கபில் தேவ், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சாதனையை படைத்ததும் இதே மைதானத்தில் தான்.nsmimg755432nsmimg3. புதிதாக கட்டப்பட்டுள்ள மோடிரா மைதானத்தில் 75 குளிர்சாதன வசதி கொண்ட கார்ப்பரேட் பாக்ஸ் உள்ளது.4. 55 அறைகள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள், உணவகங்கள், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளங்கள், ஜிம்னாஸ்டிக் கூடம், 3 டி புரோஜெக்டர் தியேட்டர் ஆகியன உள்ளன.5. புட் கோர்ட், மருத்துவ வசதி பகுதி ஆகியன உள்ளன.6. கிரிக்கெட் அகாடமி அறைகள், உள்விளையாட்டு பயிற்சி கூடங்கள் உள்ளன.7. பெவிலியன், உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட மீடியா பாக்ஸ், எல்இடி விளக்குகள் வசதிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.nsmimg755433nsmimg8. இந்த மைதானத்தில் 3000 கார்கள், 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதி கொண்ட மிகப் பெரிய பார்க்கிங் பகுதி உள்ளது.9. இந்த மைதானத்தில் கிரிக்கெட் மைதானங்களுடன் கூடுதலாக கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, டென்னிஸ், ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டு வசதிகளும் உள்ளன.10. இந்த மைதானம் ஆமதாபாத் மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. தனி வாகனங்களில் செல்ல விரும்பாதவர்கள், மெட்ரோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிரம்ப் திறந்து வைக்கும் பிரமாண்ட மைதானம்: 10 அம்சங்கள்

Top Post Ad

Below Post Ad