நீண்டதூரப் பயணங்களின்போது, அதுவும் பசிக்கும் நேரத்தில் நம் கண்களில் அவ்வப்போது ஹோட்டல் அல்லது மோட்டல் தென்படும்.
'ஹோட்டல்' தெரியும், அதென்ன 'மோட்டல்' என்கிறீர்களா?
புதிய உலகைக் கண்கள் எனும் கேமராக்களில் கேப்ச்சர் செய்யும் நாடோடிகளுக்கான உறைவிடங்கள்தான் இவை. 'ஹோட்டல்-மோட்டல்' இரண்டும் ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், இரண்டிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஹோட்டல்:
1600 காலகட்டங்களில் பிரெஞ்சு வார்த்தையான 'hôtel - ஹொட்டேல்' என்பதிலிருந்து மருவி வந்ததுதான் 'ஹோட்டல்'. பயணிகளுக்கான உறைவிடம், உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பிற சேவைகளை வழங்கும் இடம் என்பதுதான் ஹோட்டலின் அர்த்தம்.
Hotel
இங்கு நீண்ட காலம் தங்கலாம். இதன் காரணமாகவே, ஹோட்டல்களில் ஓய்வு அறைகள், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் வைத்திருப்பார்கள்.
இங்கு ரிசப்ஷன் லாபி இருக்கும்.
ஏற்கெனவே பிரபலமான சுற்றுலாத் தலங்களைச் சுற்றி அதிகமான ஹோட்டல்கள் இருக்கும்.
செலவைப் பொறுத்தவரை, ஹோட்டல்கள் கொஞ்சம் காஸ்ட்லி.
மோட்டல்:
1920-களில், 'ஹோட்டல்' மற்றும் 'மோட்டார்' என்ற வார்த்தைகளை இணைத்து அமெரிக்க மக்கள் உருவாக்கிய வார்த்தைதான் 'மோட்டல்'. அமெரிக்காவின் முக்கிய நெடுஞ்சாலை அமைப்பு வளர்ச்சியடைந்த நேரத்தில், அந்த நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டவையே இந்த மோட்டல்கள்.
இங்கு, பயணிகள் இரவு நேரங்களில் ஓய்வெடுப்பதற்காக பிரத்யேக வசதிகள் செய்து தரப்படுகின்றன. அதுவும் ஒன்று அல்லது இரண்டு இரவுகளுக்கு மட்டுமே அனுமதி.
இங்கு ரிசப்ஷன் லாபி எதுவும் இருக்காது.
Motel
எப்போதும் மோட்டல்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குத் திறந்தவெளி மைதானம் மட்டுமே இருக்கும்.
பயணத்தின்போது, குறைந்த செலவில் ஓய்வெடுக்க மோட்டல்கள் பெஸ்ட்.
இனி பயண நேரத்தில் பெருமளவு ஓய்வு தேவை என்று நினைப்பவர்கள் ஹோட்டல்களையும், சிறிது நேரம் மட்டுமே இளைப்பாற இடம் தேவை என்று நினைப்பவர்கள் மோட்டல்களையும் தேர்ந்தெடுத்து, பயண நேரத்தைக் கொண்டாடுங்கள்