Type Here to Get Search Results !

பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த நபர்



திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து கல்லை தூக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பண பரிவர்த்தனைக்காக ஏ.டி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில் இந்த ஏ.டி.எம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்கு முற்படுகிறார். அப்போது பலமுறை முயற்சித்தும்  ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் ஏ.டி.எம் இயந்திரத்தை காலால் பல முறை எட்டி உதைத்தார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தின் மீது வீசி அதனை உடைத்து  விட்டு வெளியேறினார்.
 
 இதனை பார்த்து அவருக்குப் பின்னால் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
 இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சரண் அளித்த புகாரின்பேரில் வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் பிச்சைபாண்டி விசாரணை மேற்கொண்டார். அதில் ஏ.டி.எம் மிஷினை காலால் எட்டி உதைத்து கல்லை தூக்கி  வீசி உடைத்து சம்பவத்தை அரங்கேற்றியவர் வத்தலகுண்டு அடுத்துள்ள சேவுகம்பட்டி கிராமத்தை ச் சேர்ந்த லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. இதனை அடுத்து  போலீசார் அவரை கைது செய்தனர்.

Top Post Ad

Below Post Ad