Type Here to Get Search Results !

காகிதம் பிறந்த கதை



 

மனிதன் தன் நினைவாற்றலை தாண்டி சில தகவல்களை சேகரித்து வைக்கவும், மற்றவர்களுடன் பகிரவும் முற்பட்ட போது தான் உருவானவை எழுத்துக்கள்.

ஆதிமனிதன் முதன்முதல் எழுத்துகளைப் பதித்து வைத்தது கற்களின் மீதுதான்.

அப்படி எழுதப்பட்ட கற்களை, தேவை ஏற்பட்டபோது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் தொடங்கினான்.

நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தைப் போன்ற பொருளில், உலகில் முதன்முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்தான்.

கி.மு.7-ஆம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் "பாப்பிரஸ்' ஆகும்.

இந்தப் பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுப் பகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களைச் சேர்த்து, பதப்படுத்தி, பின்பு அதனை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, எழுதுவதற்கென்று பயன்படுத்தினர்.

பேப்பர் என்ற சொல்லும் பிறந்தது பாப்பிரஸ் என்ற வார்த்தையில் இருந்து தான்.

இதேவேளை சீனர்களும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் எழுதி வந்துள்ளனர்.

கி.மு.206ம் ஆண்டு காலகட்டத்தில் சீனாவின் ஹான் வம்சத்தில் நீதிமன்ற ஆவண காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் சாய் லூன்.

எலும்புகளிலும், தடிகளிலும் எழுவதுற்கு பதிலாக மாற்று வழியை கண்டுபிடிக்க முற்பட்டார்.

அப்போது உதயமானது தான் பேப்பர், இதற்காக பல பரிசுகளை வழங்கி அரசாங்கம் கௌரவப்படுத்தியது, ஆனால் பேப்பரின் தடிமன் 5 mm ஆக இருந்தது.

சிறிது காலத்திற்கு பிறகு சாய் லூன் ஒரு காட்சியை பார்க்க நேரிட்டது, அதாவது ஒருவகைக் குளவி, மரத்தைத் துளையிட்டு, அதன் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களைக் கொண்டு, தனது கூட்டை வலிமையாகக் கட்டிக் கொள்வதைக் கண்டார்.

அப்போதுதான், மரத்தைக் கூழ்மயமாக அரைத்தால், பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொண்டார்.

இதனையடுத்து பேப்பர் ஆலை நிறுவப்பட்டாலும், சீனர்கள் இந்த நுட்பத்தை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர்.

பின் கி.பி.751ல் நடந்த போரில் அரேபியர்களிடம் சீனா தோற்றுப் போகவே, பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட சீனர்களிடம் இருந்து அரேபியர்கள் பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டனர்.

தொடர்ந்து உஸ்பெஸ்கிஸ்தானிலுள்ள மர்கண்ட் என்ற இடத்தில் அதிகாரப்பூர்வமாக பேப்பர் தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டது.

இந்நுட்பம் மற்ற நாடுகளுக்கும் பரவவே, 1844ஆம் ஆண்டில் சார்லஸ் மற்றும் கெல்லர் ஆகியோர் இணைந்து வெள்ளை நிறப் பேப்பரை உருவாக்கும் தொழில்நுட்பத்தினைக் கண்டறிந்தார்கள்.

Top Post Ad

Below Post Ad